பூந்தமிழ் மொழியிருக்க, புகலுவதேன் ஆங்கிலத்தில் ?
----------------------------------------------------------------------------
RACE = நிறவினம்
RACE = வரணம்
(சொ.ஆ.47)
RACK = நிலையடுக்கு
RADAR = தொலைப்புல
மானி
RADIATOR = அழலாற்றி
RAILWAY – BROAD GAUGE
= அகல்வழி நிரைத்தடம்
RAILWAY – METER GAUGE
= இடைவழி நிரைத்தடம்
RAILWAY – NARROW GAUGE
= குறுவழி நிரைத்தடம்
RAILWAY – TRACK = நிரை வழித்தடம்
RAILWAY = நிரைவழி
RAILWAY DEPARTMENT = நிரைவழித் துறை.
RAILWAY LINE = நிரைவழித் தடம்
RAILWAY PLATFORM = நடைவழி
RAILWAY PLATFORM
TICKET = நடைவழிச் சீட்டு
RAILWAY SEASON TICKET
= பருவச் சீட்டு
RAILWAY SIGNAL = நிரைத்தட வழிக்குறி
RAILWAY STATION = நிரை நிலையம்
RAILWAY STATION MASTER
= நிரையகப் புரவலர்
RAILWAY TICKET COUNTER
= சீட்டுமாடம்
RAM (RANDOM ACCESS
MEMORY) = நேரணு நினைவகம்
RANGE = அடுக்கம்;
ஆவளி
RANGE = சிறகம்
(சரகம் தவறு)(த.எழு.48)
RANK = தரநிலை
RANK = படிவரிசை
(ஆ.து.த)
RAPE = வன்புணர்வு
(சட்.த.82)
RATCHET = பற்சுழற்றி
RATIONAL NUMBERS = விகிதமுறு எண்கள்
RAW = பண்முன்
RAZOR = மழிகுயம்
READINESS = அணியம் (வே.சொ.04)
READY MADE DRESS = புனை துகில் (பரிபாடல்.7;46)
READY RECKONER = அணியச்சுவடி
REAL NUMBERS = மெய்யெண்கள்
REALISM = இயல்பு வாய்மை
REAMER – (MACHINE
TYPE) = பொறிவழிச் சுரண்டுளி
REAMER – ADJUSTABLE –
HAND TYPE = விரிவமை கைவழிச் சுரண்டுளி
REAMER – SPIRAL FLUTE
– HAND TYPE = சுழற்பீலி கைவழிச் சுரண்டுளி
REAMER – SPIRAL FLUTE
– MACHINE TYPE = சுழற்பீலி பொறிவழிச் சுரண்டுளி
REAMER – ST. FLUTE –
HAND TYPE = நேர்ப்பீலி கைவழிச் சுரண்டுளி
REAMER – ST. FLUTE –
MACHINE TYPE = நேர்ப்பீலி பொறிவழிச் சுரண்டுளி
REAMER – ST. SHANK –
HAND TYPE = செங்கால் கைவழிச் சுரண்டுளி
REAMER –( HAND TYPE )
= கைவழிச் சுரண்டுளி
REAMER = சுரண்டுளி
REAMER –TAPER SHANK –
MACHINE TYPE = கணைக்கால் பொறிவழிச் சுரண்டுளி.
REASON = ஏது (சொ.ஆ.45)
REASON = தலைக்கீடு (பா.தொ.91)
RECEIPTS & CHARGES
= வரவினமும் செலவினமும் (ஆது.த)
RECEIVER = கவரி
RECESSION = ஒடுங்கம்
RECIPROCAL = தலைமாற்று
RECOIL = பின்னுந்தம்
RECONCILIATION = ஒப்புரவு
RECORD PLAYER = தட்டொலிப்பேழை
RECOVERY = மீட்பு; மீட்சி
REFILL = ஈடு; புத்தீடு ; அகத்தீடு
REFINED OIL = தூவடி எண்ணெய்
REFINERY = தூவடி ஆலை
REFRESHMENT = ஊக்குணா (ஊக்கு+உணா)
REFRIGERATION = தண்பயம்
REFRIGERATOR = தண்பயப்பேழை / குளிர்ப்பேழை
REFUGE = புக்கில் (த.எழு.46)
REFUGEE = ஏதிலி (ஐங்.34.4)
REFUND = மீட்டளி
REFUTATION = மறுப்பு (சொ.ஆ.41)
REGISTRATION = பதிவீடு
REGULAR – PROMOTION = ஊழ்மை நிலை உயர்வு
REGULAR – TEMP.
PROMOTION = அன்னிலை உயர்வு
REGULAR = ஊழ்மை (முறைமை)
REGULARITY = சீர்மை
REGULARIZATION = ஊழ்மையளிப்பு
REGULARIZATION ORDER =
ஊழ்மையளி அணை
REGULATOR – (AIR) = காற்றுக் கலிங்கு
REGULATOR – (FAN ) = விசிறிக் கலிங்கு
REGULATOR – (GAS ) = வளிமக் கலிங்கு
REGULATOR = கலிங்கு
RELATIVITY = ஒப்புமை
RELAY SWITCH = ஏவாளி
REFLECTION = எதிரொளி (பா.தொ.52)
RELIEF = மாற்றீடு (சட்.த.51)
REMAINDER = ஒழிபு
REMAINDER = மிச்சில் (எஞ்சியவை)(பா.தொ.137)
REMEDY = கழுவாய் (பா.தொ.66)
REMOTE CONTROL = சேய்மையியக்கி
RENOUNCE = துறப்பு (பா.தொ.97)
RENT CONTROLLER = வாடகை முறைமையர் (த.எழு.67)
REORDER = மறுமுறைமையாக்கல்
REP = பகர்நர்
(த.ஆ.அக)
REPAIR = செப்பம் (பா.தொ.84)
REPERCUSSION = எதிர்விளைவு (த.எழு.67)
REPLACEMENT = மீள் வைப்பு
REPRESENTATIVE = சார்பாளர் (ஆ.து.த)
REPRODUCE = மீளுருவாக்கு
RESCUE HOME = மீட்பு இல்லம் (ஆ.து.த)
RESIGNATION = ஒருவல் (த.எழு.46)
RESIGNATION LETTER = ஒருவல் கடிதம் (ஆ.து.த)
RESISTANCE = தடையம்
RESISTER – (CARBON ) =
கரிமத் தடைமணி
RESISTER – (LIGHT
DEPENDENT) = ஒளிசார் தடைமணி
RESISTER – (N.T.C) = வியமதித் தடைமணி (மதிப்பு மாறும்)
RESISTER – (WIRE
WOUND) = சுருள் தடைமணி
RESISTER = தடை மணி
RESOURCE = வளம்
RESPONSE = பதில் வினை
RESTORE = மீளமை
RETARDATION = இறக்கக் கலி.(பக்.77.பொறி.குறி)
RESTAURANT = அயிலகம் (புறம்.399)
RETICULUM = வலை
RETINUE = உழையோர் (பணியாளர்)(த.எழு.47)
RETRIEVE = மீட்பெறு
REVERED MAN = பெருந்தகை (பா.தொ.124)
REVERSIBILITY = மீள் திருப்புகை
REVERSIBLE = மீள் தகு
REVERSIBLE SWITCH = இட வல ஆளி
REVIEW = மறு ஆய்வு (சட்.த.72)
REVISION = சீராய்வு (சட்.த.72)
RHEOSTAT = தடை மாற்றி
RHETORIC = அணியியல் (த.இல)
RHOMBUS = சாய் சதுரம்
RHYME = எதுகை
(த.இல)
RHYTHM = சந்தம் (த.இல)
RIB = பழு
RIBBON = நாடா
RICE = அமலை
(குறு.277.2)
RICE = சோறு
(புற.20, 220, 235, 250, 261, 399)
RICKSHAW – (AUTO) = பொறிச் சிவிகை
RICKSHAW – (CYCLE) மிதி சிவிகை
RICKSHAW – (DRIVER) = சிவிகை வலவர்
RICKSHAW = சிவிகை
RIGHT CLICK = வலச் சொடுக்கு
RIGIDITY = நெளியாமை
RIM = வட்டை
RIP SAW = ஊடறு வாள்
RISK = ஆபத்துக்
கூறு
RIVET = தறையாணி;
சுள்ளாணி
ROAD ROLLER = சாலையுருளை; உருளையூர்தி
ROCKET = விறிசு; வாணம்
ROLL = கண்டு
(த.ஆ.அக)
ROLL = சுருணை
ROLL NUMBER = சுழலெண்
ROOM = ஆரல்;
கசாலை
ROOT (MATH) = படிமூலம்
ROOT, DERIVATION = பகுதி (த.இல)
ROPE = தாம்பு
(பெரு.244, முல்.12)
ROSE COLOUR = புல்லை நிறம்
ROSE COLOUR = புல்லைநிறம், தோரை நிறம் (த.ஆ.அக)
ROSE MILK = செம்பால்
ROSIN = அராளம்
ROTARY SWITCH = ஊர்முனை ஆளி
ROTOR = சுழலி
ROUGH COPY = கரட்டுப் படி
ROUGH COPY = திருத்தாப்படி (த.எழு.67)
ROUGH DRAFT = ஈனை வரைவு
ROUTE = பாட்டை
(த.ஆ.அக)
ROUTER = திசைவி
ROUTINE = வாலாயம் (த.எழு.78)
ROYALTY = உரியம் (த.எழு.66)
RUBBER = பயின் (அக.1.5, பரி.10.54))
RUBBER = பயின், மீள்மம்
RUBY = பழுமணி
RULE – (BRASS) = பித்தளை ஆய்கோல்
RULE – (FOUR FOLD) = நான்மடி ஆய்கோல்
RULE – (STAINLESS
STEEL) = ஒளியுருக்கு ஆய்கோல்
RULE – (STEEL) = உருக்கு ஆய்கோல்
RULE – (ZIG ZAG) = பன்மடி ஆய்கோல்
RULE = ஆய்கோல்
RULER = வரைகோல்;
ஆய்கோல்
RUMOUR = ஊரலர்
-------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு =
பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.cim]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி: 2052, கும்பம் (மாசி) 07]
(19-02-2021)
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக