name='description'/> தமிழ்த்தேன் : "D"சொற்கள்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

"D"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"D"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "D" TERMS

தீந்தமிழ் மொழியிருக்க, தென்னவரே ஆங்கிலம் ஏன் ?

--------------------------------------------------------------------

D.G.S&D = வழங்கல்,கழிப்புத் துறை தலைமை இயக்ககம் (த.எழு.65)

DAILY = வைகலும் (தினமும்) (குறள். 083)

DANCE MASTER = நட்டுவனார் (த.ஆ.அக)

DANGER BOARD = இடர்க் குறிப்பலகை

DARK BLUE = மணிநிறம் (த.ஆ.அக)

DASH = குறுங்கோடு

DATA PROCESSING = தரவினலசல் (இன்=சாரியை)

DATING = அரும்பொழுக்கு

DAWN = புலரி விடியல் (வைகறை)(பா.தொ122)

DAY – BAZAAR = நாளங்காடி (மது.430)

DEAD STOCK = கிடைச் சரக்கு

DEADLOCK = முடக்கம் (ஆ.து.த)

DEARNESS ALLOWANCE = அருந்தற்படி (வே.சொ..13)

DEBENTURE = கடனீடு

DEBUG = பிழையலசு

DEBUT = அரங்கேற்றம்

DECADE = பத்தாண்டு (த.இல)

DECIMALS = கீழ்வாயிலக்கம்(த.இல)

DECOCTION = கருக்கு (வே.சொ.122)

DECOCTION = வடிநீர் (த.ஆ.அக)

DECODER = குறிநீக்கி

DECORATION = கைபுனைவு (த.ஆ.அக)

DECORATION = கைபுனைவு (பா.தொ.75)

DECORATION = சுவடிப்பு

DECORUM = மதிப்பு வரம்பு (த.ஆ.அக)

DECREE = தீர்ப்பாணை (சட்.த.66)

DEDICATION = காணிக்கை (ஆ.து.த)

DEDUCE = தருவி

DEFINITION = வரம்புரை

DEFINITION = வரம்புரை (த.எழு.65)

DEGREE - B .Litஇல. வா (இலக்கிய வாலை)

DEGREE - B. Scஅறி .வா (அறிவியல் வாலை )

DEGREE – B.Aகலை.வா (கலையியல் வாலை)

DEGREE - B.Archக. க. வா (கட்டடக் கலையியல் வாலை)

DEGREE – B.B.A = வணி.மே.வா (வணிக மேலாண்மை வாலை)

DEGREE – B.C.A = கணி.ப.வா (கணினிப் பயனியல் வாலை)

DEGREE – B.Comவணி.வா (வணிகவியல் வாலை)

DEGREE – B.D.S. = ப.மரு.வா (பல் மருத்துவ வாலை)

DEGREE - B.Eபொ. வா (பொறியியல் வாலை)

DEGREE – B.L = ச.வா (சட்டவியல் வாலை)

DEGREE – B.Pharmம.செய்.வா (மருந்து செய்பியல் வாலை)

DEGREE - B.Sஅரி. வா (அரிவியல் வாலை)

DEGREE – B.Tech = பொ.நு.வா (பொறி நுட்பவியல் வாலை)

DEGREE – B.V.Sc = கா.அறி.வா (கால்நடை அறிவியல் வாலை)

DEGREE - M. Sc அறி .மே (அறிவியல் மேதை)

DEGREE - M.Aகலை .மே (கலையியல் மேதை)

DEGREE – M.Arch = க.க.மே (கட்டடக் கலையியல் மேதை)

DEGREE – M.Bம. வா (மருந்தியல் வாலை)

DEGREE - M.B.A வணி. மே. மே (வணிக மேலாண்மை மேதை)

DEGREE - M.C.Aகணி. ப. மே (கணினிப் பயனியல் மேதை)

DEGREE – M.Comவணி.மே (வணிகவியல் மேதை)

DEGREE - M.D.Sப. மரு. மே (பல் மருத்துவ மேதை)

DEGREE - M.Eபொ. மே (பொறியியல் மேதை)

DEGREE – M.L = (ச.மே (சட்டவியல் மேதை)

DEGREE – M.Litஇல.மே (இலக்கிய மேதை)

DEGREE – M.Pharmம.செய்.மே (மருந்து செய்பியல் மேதை)

DEGREE – M.Philமெ. பொ. மே (மெய்ப்பொருளியல் மேதை)

DEGREE – M.Sஅரி.மே (அரிவியல் மேதை)

DEGREE – M.Tech = பொறி.நு.மே (பொறி நுட்பவியல் மேதை

DEGREE - M.V.Scகா.அறி.மே (கால்நடை அறிவியல் மேதை)

DEGREE – Ph.Dமுனை (முனைவர்)

DEGREE HOLDER = பட்டதாரி(த.எழு.61)

DEL = அகற்று

DEL KEY = அகற்று விசை

DELETE = அகற்று

DELIVERY CHALAN = தருகைச்சீட்டு (த.ஆ.அக)

DELTA = கழிமுகம் (த.ஆ.அக)

DELTA CONNECTION = வலைமின் இணைப்பு

DEMAND DRAFT = பார்வை வரைவு

DEMOLISH = இடித்தழி (த.ஆ.அக)

DEMONSTRATIVE LETTER = சுட்டெழுத்து(த.இல)

DEMURRAGE = கிடப்பு வரி

DENDRON = ஓடிழை

DENIAL = மறுதலிப்பு (சொ.ஆ.41)

DENOMINATOR = கீழெண்

DENSITY = திண்ணிமை

DENT = அதுக்கு (வே.சொ.84)

DEPARTMENTAL STORE = பல்பொருள் அங்காடி

DEPARTMENTAL STORES = பல்துறைப் பண்டகம் (ஆ.து.த)

DEPOSIT – (CUMULATIVE TIME) = வளர் பணவை

DEPOSIT – (FIXED) = வரம்புப் பணவை

DEPOSIT – (RECURRING) = தொடர் பணவை

DEPOSIT – (TIME) = காலப் பணவை

DEPOSIT = பணவை (பணம் + வை)

DEPOT = ஆவடி (த.ஆ.அக)

DEPTH = நீத்தம் (பா.தொ.107)

DEPTH GAUGE = அகப்பளவி (த.ஆ.அக)

DEPUTATION = பகராண்மை(த.ஆ.அக)

DEPUTY MINISTER = இடைநிலை அமைச்சர்

DERIVATION = திரிபு (வே.சொ.269)

DERIVATION = வருவிப்பு

DERIVATIVE = வருதி

DERIVE = வருவி

DESCENDANT = பிறங்கடை (பா.தொ.119)

DESIGN = கோலப்பாடு (பக்.59.பொறி.குறி)

DESIGNATION = அலுவல் பெயர்(த.எழு.67)

DESIGNER = கோலிகர்

DESIGNER SAREE = கோலப் புடைவை

DESIRABLE = நயத்தக்க (பா.தொ.103)

DESIRE = நசை (பா.தொ.102)

DESK = பணிமேசை

DESKTOP = பணித்தளம்

DETAIL = வயணம்

DETAIL = வயணம் (த.ஆ.அக)

DETECT = துய்யறி

DETERGENT = அழுக்குப் போக்கி

DEVASTATING RAIN = அழிபெயல்(த.எழு.470

DEVELOPMENT = வளராக்கம்

DEVICE = ஆம்புடை (உபாயம்) வே.சொ.229)

DEW POINT = பனிப்பு நிலை

DEWY SEASON = அற்சிரம் (நற்84.6)

DIAGNOSE = பழுதறி

DIAGRAM = ஆரவரிப்பு (பக்.29.பொறி.குறி)

DIAGRAM = படவரைவு

DIAGRAM = விளக்கப்படம் (த.ஆ.அக)

DIAL = தகழி

DIAL TEST INDICATOR = தளச் சீரளவி

DIALYSIS = ஊடுபகுப்பி

DIASTOLIC = விரிதுடிப்பு

DICTATORSHIP = வல்லாண்மை

DIE = கட்டளை (வே.சொ.136)

DIE = புறப்புரிசை

DIE MAKER = கரு வடிப்போர்

DIE SET – (PIPE) = குழாய்ப் புரிசை

DIE SET (CONDUIT) = தடக் குழாய்ப் புரிசை

DIE SET = புரிசைக் கணம்

DIESEL ENGINE = தீயல் அழலை

DIFFERENCE = வேற்றுமை (சொ.ஆ.41)

DIFFUSION = விரவல்

DIGITAL = எண்மின்

DIGITAL WATCH = துடி கடிகை

DIGNITY = தகைமை (பா.தொ.89)

DILIGENCE = தளராவூக்கம்(ஆ.து.த)

DIMENSION = விண்ணாரம் (பக்.82.பொறி.குறி)

DINING TABLE = ஊ மணை

DIPLOMA = பட்டயம் (த.எழு.61)

DIPLOMA HOLDER = பட்டயதாரி(த.எழு.61)

DIPLOMACY = வெல்திறம் (த.ஆ.அக)

DIRECT CURRENT = நேரலை மின்சாரம்

DIRECTORY = கோப்பகம்

DISABLE = செயலிறக்கு

DISBURSING OFFICER = கொடுப்புரிமை அலுவலர்

DISCERN BY SMELL = மோத்தல் (மூக்கால் நுகர்தல்) (குறள்.

DISCONTINUANCE = இடையறல்

DISCONTINUANCE = ஒடிவை (இடையறவு) பா.தொ.56)

DISCREPANCY = மாறுபாடு (த.ஆ.அக)

DISCREPANCY = முரண்பாடு (த.ஆ.அக)

DISCUSSION =உசாவுதல் (ஆலோசித்தல்)(சொ.ஆ.57)

DISH = கும்பா

DISH = தட்டுஉண்கலம் (த.ஆ.அக)

DISPENSARY = மருந்தகம் (த.ஆ.அக)

DISPLAY = காட்சியணி (த.ஆ.அக)

DISPLAY = காட்சியம்

DISSIMILARITY = ஒப்பின்மை (த.ஆ.அக)

DISTANT PLACE = சேட்புலம் (த.ஆ.அக)

DISTANT PLACE = சேட்புலம்சேண், (பா.தொ.87,94)

DISTILLED WATER = ஆவிநீர்

DISTILLED WATER = ஆவிநீர் (த.ஆ.அக)

DISTINCTION = தனிச்சிறப்பு(த.இல)

DISTRESS = விழுமம் (துன்பம்) (குறள். 107)

DITCH & CREST = அவலும் மிசையும் (மது.240)

DIVERSITY = பன்மயம்

DIVIDEND = ஆதாயப்பங்கு (த.ஆ.அக)

DIVIDER = கவைமுள்

DIVIDER = கவைமுள் (த.ஆ.அக)

DOCTOR = மூதறிஞர் (த.எழு.63)

DOCTRINE = கொள்கை (சொ.ஆ.60)

DOMAIN = ஆட்களம்

DOMESTIC SCIENCE = மனையியல்

DOMINION = ஆட்சிப்பகுதி (த.ஆ.அக)

DORMANT = உறக்கநிலை (த.ஆ.அக)

DOSAI = தோசை (தோய்+செய்)

DOUBLE = இரட்டை

DOUBLE END SPANNER = இரு முனைச் சிலம்பு

DOUBLET = இரட்டை

DOUBLING = இரட்டல் (த.ஆ.அக)

DOUBT = ஈரொட்டுஅயிர்ப்பு (த.ஆ.அக)

DOWEL PIN = நெம்பாணி

DOZEN = கலம் (கலம் =12; பகம்=6 );{கலம்பகம் 18 உறுப்பமைவு]

DOZEN = பன்னீர் (தொல்..நூ.08, 26)

DRAINAGE WATER = வடிதாரை (பொறி.குறி.89)

DRAINAGE சாலகம் = (அங்கணம்) (வே.சொ.232)

DRAWING = ஓவம் (அக.54.4.நற்.268.4.பரி.21,28)

DRAWING HALL = அகலறை (குறி.98)

DRAWING OFFICER = எடுப்புரிமை அலுவலர்

DRAWING PIN = பிணையூசி

DRESSING ROOM = அணியரங்கம் (த.ஆ.அக)

DRIED GINGER = சுக்கு (வே.சொ.211)

DRIED UP TANK = அறுகுளம்(த.எழு.47)

DRILL – (COMBINATION) = குழிப்புக் குயிலி

DRILL - (TWIST) = சுழற் பீலிக் குயிலி

DRILL – STRAIGHT SHANK = செங்காற் குயிலி

DRILL - TAPER SHANK = கணைக்காற் குயிலி

DRILL BIT = குயிலி (வே.சொ.197,மது.474,511, நெடு.88,சிலப்.இந்.46)

DRILL BRACE = குயிலிச்சூரல்

DRILL CHUCK = குயிலிச்சிமிழி

DRILLER = குயினர் (மது.511)

DRILLER = குயினர் (மது.511) (த.ஆ.அக)

DRILLING MACHINE (BENCH) = விசியமைக் குயிற்பொறி

DRILLING MACHINE (HAND) = கைவலக் குயிற்பொறி

DRILLING MACHINE (PILLAR) = எழுவமைக் குயிற்பொறி

DRILLING MACHINE (RADIAL) = சுழலியக்கக் குயிற்பொறி

DRILLING MACHINE = குயிற் பொறி

DRINKING WATER = உண்ணீர் (த.ஆ.அக)

DRINKING WATER TANK = உண்குளம் (த.எழு.47)

DRINKS = சுவைநீர்

DRINKS = துவ்வை (வே.சொ.283)

DRINKS = நீராளம் (த.ஆ.அக)

DRIVER = வலவர் (அக.20.8,குறு.311.2,சிறு.260,புற.27)

DRIVING LICENCE = உகை உரிமம்

DRONE = சுரும்பு

DROPSY = நீர்க்கோவை (த.ஆ.அக)

DROUGHT = வற்கடம் (த.ஆ.அக)

DRUG = மருந்துச் சரக்கு(த.ஆ.அக)

DRUM = அரிப்பறை (ஐங்.81.2)

DRUM = ஆகுளி (இசைக்கருவி) (மலை.03)

DRY = உணங்கு (த.ஆ.அக)

DUALITY = இருமை (த.ஆ.அக)

DUCTILITY = தகடாகுமை

DUE DATE = முறை நாள்

DUET = எதிர்ப்பாட்டு (த.ஆ.அக)

DUMB = ஊமன் (குறு.58.4, 85.3)

DUNGEON = காரகம்இருளறை (த.ஆ.அக)

DUPLICATE = பகர்ப்பு (த.ஆ.அக)

DUPLICATING PAPER = இரட்டுத் தாள்

DUPLICATOR = இரட்டுப் பொறி

DURABILITY = உழைதிடம்

DURATION = காலக்கூறு (த.ஆ.அக)

DURATION = நிகழ்வுக் காலம்

DUSTER = தூளிப் பொறி ( தூளி=பொடி)

DUTY = கடப்பாடு (கடமைப் பொறுப்பு) (குறள். 211)

DYNAMICS = இயக்கவிசை இயல் (த.ஆ.அக)

DYNAMICS = இயக்கவியல்

DYNASTY = அரசமரபுகால்வழி (த.ஆ.அக)

-------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

--------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி:2052,கும்பம் (மாசி) 02}
14-02-2021
--------------------------------------------------------------------------------