தீந்தமிழ் மொழியிருக்க, தென்னவரே, ஆங்கிலம் ஏன் ?
---------------------------------------------------------------------------
QUADRANT PLATE = கருந்தலைத் தட்டு (க.த.கை)
QUADRUPLE = நான்மடி
QUALIFYING SERVICE = தகுதிபெறு பணி (ஆ.து.த)
QUALITATIVE .= பண்புசார்
QUANTITATIVE = அளவுசார்
QUANTUM = துணுக்கம்
QUARTER = முத்திங்கள்
QUARTER FINAL = பாலீற்றயல்
QUARTERLY = மும்மாதிகை
QUASI GOVERNMENT = நிழலரசு
QUENCHING TANK = தணிப்புத் தொட்டி
QUERY = அறிவினா
QUEUE = நெடுவரி
(பா.தொ.109)
QUICK = ஒல்லை
(த.எழு.46)
QUICK FIX = ஒல்லையொட்டி
QUICKSAND = புதைமணல்
QUIRE = எண்மூ (8 X 3 = 24)
QUIVER = தூணி (கூடு, கூடை)(பா.தொ.97)
QUORUM = கோரெண் (த.எழு.52)
QUOTATION = குறிப்பீடு
QUOTATION = விலைப்புள்ளி (ஆ.து.த)
QUOTIENT = ஈவு
-------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு =
பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி: 2051,கும்பம் (மாசி)07}
(19-02-2021)
------------------------------------------------------------------------------------